/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 26, 2024 07:05 AM

மதுரை : தமிழக அரசு துறைகளில் கருணை அடிப்படையில் 'குரூப் சி' பணி நியமனத்தில் 25 சதவீதம் ஒதுக்கீடு இருந்தது. கடந்தாண்டு இதனை மாற்றி 5 சதவீதமே வழங்க வேண்டும் என அரசு உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது.
கருணை அடிப்படையில் பணிநியமனத்திற்கு பாதிப்பு ஏற்படும். எனவே உச்சவரம்பை நீக்க வேண்டும் எனக்கூறி மதுரையில் அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டத் தலைவர் சின்னப்பொண்ணு தலைமை வகித்தார். செயலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். உள்ளாட்சி பணியாளர் சங்க கூட்டமைப்பு நிர்வாகி முனியசாமி, மாநில செயற்குழு உறுப்பினர் மனோகரன், அரசு உதவிபெறும் கல்லுாரி அலுவலர்கள் சங்க நிர்வாகி வீரவேல் பண்டியன், சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி தமிழ்ச்செல்வி, நெடுஞ்சாலைத்துறை மாரி, போக்குவரத்துத்துறை ஊழியர் சங்க நிர்வாகி நடராஜன் உட்பட பலர் பங்கேற்றனர்.
அரசு ஊழியர்கள் சங்க பொருளாளர் கல்யாணசுந்தரம் நன்றி கூறினார்.