ADDED : ஜூன் 14, 2024 05:17 AM
மதுரை: ஆர்.டி.ஓ., அலுவலகங்களில் ஓட்டுனர் உரிமம் வழங்குவதை தனியார் மயமாக்கக் கூடாது, புதிய வாகன வரி உயர்வு சட்டத்தை திரும்ப பெற வேண்டும், சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி மதுரை அண்ணா பஸ்ஸ்டாண்ட் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
சோஷியல் டெமாக்ரடிக் டிரேட் யூனியன் என்ற (எஸ்.டி.டி.யூ.,) அமைப்பின் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட தலைவர் நிசார் தலைமை வகித்தார். செயலாளர் மன்சூர் வரவேற்றார்.
தெற்கு மாவட்ட தலைவர் சீமான்சிக்கந்தர், தேசிய பொதுச் செயலாளர் முகம்மது பாரூக் பேசினர். தெற்கு மாவட்ட செயலாளர் பெரியபாவாதீன் நன்றி கூறினார்.