/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 28, 2024 12:31 AM

மதுரை: தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. கலைஞர் கனவு இல்லம், ஊரக வீடுகள் மராமத்து திட்டங்களை செயல்படுத்த மாநில, மாவட்டம், வட்டார அளவில் போதுமான ஊழியர் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். திட்டங்களை முழுமையாக செயல்படுத்த போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
மதுரை மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மதுரை கிழக்கு மற்றும் மேற்கில் மாவட்ட செயலாளர் அமுதரசன், திருப்பரங்குன்றத்தில் மாநில பொருளாளர் விஜயபாஸ்கர், கள்ளிக்குடியில் மாவட்ட தலைவர் சந்திரசேகர், செல்லம்பட்டியில் மாவட்ட பொருளாளர் அன்பழகன் உட்பட அனைத்து ஒன்றியங்களிலும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
உசிலம்பட்டி
செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாடத்தில் மாவட்ட இணைச் செயலாளர் ஜெயபாலன், பொருளாளர் அன்பழகன், மாநில செயற்குழு உறுப்பினர் பாலாஜி, வட்ட கிளைத் தலைவர் சிவமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம்
வட்டார தலைவர் முத்துப்பாண்டி தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் வடிவேல், பிரபு முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சந்திரசேகரன், மாநில பொருளாளர் விஜயபாஸ்கர் பேசினர். வட்டார பொருளாளர் தங்கமுத்து நன்றி கூறினார்.