ADDED : ஜூலை 23, 2024 05:28 AM
மேலுார்: மேலுார் மற்றும் கொட்டாம்பட்டியில் ஹிந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மேலுாரில் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன், கொட்டாம்பட்டியில் புறநகர் தலைவர் செந்தில்மூர்த்தி தலைமை வகித்தனர்.
நிர்வாகி வைரமுத்து முன்னிலை வகித்தார். கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்த செய்யவும், கோயிலை விட்டு அறநிலையத்துறை வெளியேறவும் கோஷமிட்டனர். மாவட்ட செயலாளர் வெங்கடேசன், வழக்கறிஞர்கள் கண்ணன், முருகன், நிர்வாகிள் ராஜூ, பாண்டி, பிரசன்னா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.