/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தாமதமாகும் பஸ் ஸ்டாண்ட் பணி எம்.எல்.ஏ., ஆய்வு தாமதமாகும் பஸ் ஸ்டாண்ட் பணி எம்.எல்.ஏ., ஆய்வு
தாமதமாகும் பஸ் ஸ்டாண்ட் பணி எம்.எல்.ஏ., ஆய்வு
தாமதமாகும் பஸ் ஸ்டாண்ட் பணி எம்.எல்.ஏ., ஆய்வு
தாமதமாகும் பஸ் ஸ்டாண்ட் பணி எம்.எல்.ஏ., ஆய்வு
ADDED : ஜூன் 14, 2024 05:23 AM

உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் பஸ்ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணிகள் தாமதமாவது குறித்து உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் நகராட்சி அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டார்.
உசிலம்பட்டியில் பழைய பஸ்ஸ்டாண்ட் புதுப்பிக்கும் பணிக்காக ரூ. 8 கோடி அரசு ஒதுக்கீடு செய்தது. 2023 ஜூலை 17 ல், பூமிபூஜை நடத்தி பணிகள் நடந்து வருகிறது.
அரசினர் குடியிருப்பு பகுதியில் தற்காலிக பஸ்ஸ்டாண்ட் செயல்படுகிறது. இதற்கிடையே பழைய பஸ் ஸ்டாண்டை புதுப்பிக்க தேவையான கூடுதல் ஒரு ஏக்கர் நிலத்திற்காக ஊராட்சி ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ள சந்தை திடலை நகராட்சியிடம் ஒப்படைக்க அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து கூடுதல் இடத்தை கையகப்படுத்தவும், அப்பகுதி கடைகளை அப்புறப்படுத்தவும் பணிகள் நடக்கிறது.
ஓராண்டாக நடந்து வரும் பணியை நேற்று எம்.எல்.ஏ., அய்யப்பன் கட்சி நிர்வாகிகளுடன் சென்று பார்வையிட்டார். நகராட்சி பொறியாளர் பட்டுராஜன், அலுவலர்களிடம் பணிகள் குறித்து கேட்டார். விரிவாக்க பகுதிகளை கையகப்படுத்தி விரைந்து பணிகளை முடிக்க வேண்டும். குப்பையை எரிக்காமல் முறையாக கையாளவும், உசிலம்பட்டி கண்மாயில் கழிவுநீர், குப்பை கொட்டாமல் பராமரிக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.