/உள்ளூர் செய்திகள்/மதுரை/ காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதம் காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதம்
காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதம்
காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதம்
காட்டுப்பன்றிகளால் விளைநிலங்கள் சேதம்
ADDED : ஜூன் 19, 2024 04:41 AM
பேரையூர் : பேரையூர் வட்டாரத்தில் விளைநிலங்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
சாப்டூர் வனப்பகுதியில் யானை, சிறுத்தை, மான், காட்டு மாடு, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. இவற்றில் காட்டுப்பன்றிகள் அதிகளவில் விளை நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன. வனப்பகுதியை ஒட்டிய விளை நிலங்களில் சோளம், கம்பு, கரும்பு பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர்.
இவ்வயலுக்குள் அடிக்கடி புகும் காட்டுப்பன்றிகள் பயிர்களை துவம்சம் செய்வதால் விவசாயிகள் பலர் நஷ்டம் அடைந்துள்ளனர். பெரும்பாலும் இரவில் அவை கூட்டம், கூட்டமாக வயலுக்குள் இறங்குவதால் விவசாயிகளால் கட்டுப்படுத்த முடியவில்லை.
பல்வேறு முயற்சிகளை கையாண்டும் பலனில்லாததால் வனத்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.