Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ டேலி, தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி

டேலி, தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி

டேலி, தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி

டேலி, தங்கநகை மதிப்பீட்டாளர் பயிற்சி

ADDED : மார் 12, 2025 01:16 AM


Google News
மதுரை; மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய அரசின் எம்.எஸ்.எம்.இ. தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையத்தில் டேலி மற்றும் தங்கநகை மதிப்பீட்டாளருக்கான கட்டண பயிற்சி அளிக்கப்படுகிறது.

மார்ச் 15, 16, 22, 23ல் டேலி இ.ஆர்.பி. பயிற்சி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை அளிக்கப்படும். டேலி மாஸ்டர்ஸ், இன்வென்ட்ரி பரிமாற்றம், இன்வென்ட்ரி ரிப்போர்ட்ஸ், லாப, நஷ்ட ஸ்டேட்மென்ட் பேலன்ஸ் ஷீட், டிரையல் பேலன்ஸ், வரவு செலவு விளக்கம், ஸ்டாக் சம்மரி கற்றுக் கொடுக்கப்படும்.

மார்ச் 17 முதல் 28 வரை காலை 10:00 முதல் மதியம் 4:00 மணி வரை நடக்கும் தங்க நகை மதிப்பீட்டாளர் பயிற்சியில் சுத்த தங்கம் கணக்கிடுதல், தரம் பார்க்கும் முறை செய்முறை விளக்கம் அளிக்கப்படும். வங்கி கடனுதவி பெற வழிகாட்டப்படும். அலைபேசி: 86956 46417.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us