/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கால்நடை சந்தைக்கு வரும் வாகனங்களால் நெரிசல் கால்நடை சந்தைக்கு வரும் வாகனங்களால் நெரிசல்
கால்நடை சந்தைக்கு வரும் வாகனங்களால் நெரிசல்
கால்நடை சந்தைக்கு வரும் வாகனங்களால் நெரிசல்
கால்நடை சந்தைக்கு வரும் வாகனங்களால் நெரிசல்
ADDED : ஜூன் 09, 2024 04:40 AM

மேலுார் : மேலுார் கால்நடை சந்தைக்கு வரும் வாகனங்கள் ஒழுங்கற்ற முறையில் நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
மேலுார் சந்தைப்பேட்டையில் நகராட்சி சார்பில் கால்நடை சந்தை ஞாயிறு, திங்கள் நடக்கிறது. கால்நடைகள் மற்றும் வாகனங்களுக்கு பணம் வசூலிக்கும் ஒப்பந்தத்தை நகராட்சி நிர்வாகம் தனியாரிடம் ஒப்படைத்துள்ளது. அதே வளாகத்தினுள் தற்காலிக காய்கறி சந்தையும் செயல்படுகிறது. தற்போது ஞாயிறு சந்தைக்கு சனிக்கிழமை காலையில் மாடுகள் கொண்டு வரப்படுவதால் வாரத்தில் மூன்று நாட்கள் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
டிரைவர்கள் கூறியதாவது: சந்தையில் வாங்கும் கால்நடைகளை வெளி இடங்களுக்கு கொண்டு செல்ல மெயின் ரோட்டின் இருபுறமும் வாகனங்களை குறுக்கும், நெடுக்குமாக நிறுத்துவதால் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது.
அதனால் கனரக வாகனங்கள் முன்னேறிச் செல்ல முடியாமல் அரைமணி நேரம் கூட காத்து கிடக்கின்றன. போக்குவரத்து போலீசார், நகராட்சி மற்றும் ஒப்பந்ததாரர் இணைந்து வாகனங்கள் நிறுத்துவதை ஒழுங்குப்படுத்த வேண்டும் என்றனர்.