/உள்ளூர் செய்திகள்/மதுரை/ வரி வசூலிப்பு பணி தீவிரம் கமிஷனர் தினேஷ்குமார் தகவல் வரி வசூலிப்பு பணி தீவிரம் கமிஷனர் தினேஷ்குமார் தகவல்
வரி வசூலிப்பு பணி தீவிரம் கமிஷனர் தினேஷ்குமார் தகவல்
வரி வசூலிப்பு பணி தீவிரம் கமிஷனர் தினேஷ்குமார் தகவல்
வரி வசூலிப்பு பணி தீவிரம் கமிஷனர் தினேஷ்குமார் தகவல்
ADDED : ஜூன் 14, 2024 05:15 AM
மதுரை: மதுரை மாநகராட்சியில், லோக்சபா தேர்தலுக்கு பின் வரி வசூலிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என கமிஷனர் தினேஷ்குமார் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது மாநகராட்சியில் சொத்து, கடைகள், தொழில், பாதாளச் சாக்கடை, குடிநீர் வரிகள், குத்தகை வருவாய் வசூலிப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக 1800க்கும் மேற்பட்ட மாநகராட்சி கடைகளில் நீண்ட நாட்களாக வரி வசூலிக்கப்படாமல் நிலுவையில் உள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வார்டுகள் வாரியாக கணக்கெடுக்கும் பணிகள் துவங்கியுள்ளன. சில கடைகள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தாலும் அவையும் வரி வசூலிப்பு 'லிஸ்ட்'டில் உள்ளது.
உரிய நோட்டீஸ் அனுப்பி நிலுவை வரியை வசூலிக்கும் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு உள்ளன. மால்கள், பெரிய நிறுவனங்களில் அதிக தொகையில் வரி நிலுவை இருந்தது. அவற்றில் 90 சதவீதம் வசூலிக்கப்பட்டுள்ளது என்றார்.