Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ பெண் கொலையில் கூட்டுறவு ஊழியர் கைது

பெண் கொலையில் கூட்டுறவு ஊழியர் கைது

பெண் கொலையில் கூட்டுறவு ஊழியர் கைது

பெண் கொலையில் கூட்டுறவு ஊழியர் கைது

Latest Tamil News
மதுரை : மதுரை சிலைமான் அருகே தென்னந்தோப்பில் பெண் கொலை செய்யப்பட்டுக் கிடந்த வழக்கில் கூட்டுறவு சங்க ஊழியர் இளங்கோவன் 55, கைது செய்யப்பட்டார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே இடைக்காட்டூரைச் சேர்ந்தவர் கலைச்செல்வி 47. கடந்த ஜூலை 10ல் சிலைமான் அருகே ஒரு தென்னந்தோப்பில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் யார், எதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற விவரம் உடனே தெரியவில்லை.

எஸ்.பி., அர்விந்த் உத்தரவுப்படி 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்தது. சி.சி.டிவி., காட்சிகளை ஆய்வு செய்ததன் அடிப்படையில் மானாமதுரை அருகேவுள்ள அன்னியனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர் இளங்கோவன் 55, கைது செய்யப்பட்டார்.

ஆறு ஆண்டுகளாக இருவருக்கும் தகாத உறவு இருந்த நிலையில் இளங்கோவனிடம் அப்பெண் ரூ. 6 லட்சம் கடன் வாங்கி திருப்பித் தராமல் இழுத்தடித்துள்ளார்.

சம்பவத்தன்று இது தொடர்பாக இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் அப்பெண்ணை சுவரில் முட்டச் செய்தும், கட்டையால் அடித்தும் இளங்கோவன் கொலை செய்தார். ஒரு மாதத்துக்கும் மேலாக அவரை கண்காணித்த போலீசார், தொழில் நுட்பங்களின் அடிப்படையில் உறுதி செய்து, இளங்கோவனை கைது செய்தனர். போலீசாரை எஸ்.பி., அரவிந்த் பாராட்டினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us