ADDED : ஜூலை 29, 2024 12:33 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல் நிலைப் பள்ளியில் சிலம்பம் பயிற்சி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா மதுரை மாவட்ட சிலம்பம் விளையாட்டுக் கழகச் செயலாளர் மாமல்லன் மணி தலைமையில் நடந்தது.
இந்தியன் சிலம்பம் பள்ளிச் செயலாளர் சார்லஸ், உசிலம்பட்டி சிலம்பம் பள்ளிச் செயலாளர் யுவராஜ், பயிற்றுநர்கள் அழகுபாண்டியன், நடராஜ், ஹரிஸ் உள்ளிட்டோர் சிலம்பம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்வழங்கினர்.