/உள்ளூர் செய்திகள்/மதுரை/ தேர்வு மறுமதிப்பீடு கட்டணம் திரும்ப வழங்க வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி தேர்வு மறுமதிப்பீடு கட்டணம் திரும்ப வழங்க வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
தேர்வு மறுமதிப்பீடு கட்டணம் திரும்ப வழங்க வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
தேர்வு மறுமதிப்பீடு கட்டணம் திரும்ப வழங்க வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
தேர்வு மறுமதிப்பீடு கட்டணம் திரும்ப வழங்க வழக்கு; உயர்நீதிமன்றம் தள்ளுபடி
ADDED : ஜூன் 28, 2024 12:06 AM

மதுரை : பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு மறுமதிப்பீட்டில் மதிப்பெண் அதிகரித்தால் வசூலித்த கட்டணத்தை மாணவருக்கு திரும்ப வழங்க உத்தரவிடக்கோரிய வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் வளன் தாக்கல் செய்த பொதுநல மனு: சட்டப்படிப்பு முடித்துள்ளேன். பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் விடைத்தாள்களின் நகல்கள், மறு கூட்டல் அல்லது மறுமதிப்பீடு கோரி விண்ணப்பிக்கின்றனர். இதற்கு தமிழக அரசு கட்டணம் வசூலிக்கிறது.
மறுமதிப்பீடு செய்த பின் மதிப்பெண் அதிகரித்தால் வசூலித்த கட்டணத்தை மாணவர்களுக்கு திரும்ப வழங்க அரசு தேர்வுகள் துறை இயக்குனரகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது.
அரசு தரப்பு: அதிக மாணவர்கள் பொதுத் தேர்வு எழுதுகின்றனர். மனித தவறுகளை சரி செய்ய, சிறப்பு கவனம் செலுத்த மாணவர்களுக்கு மறு மதிப்பீடு வாய்ப்பு வழங்கப்படுகிறது. அலுவல் ரீதியான நடைமுறைகளுக்கு குறைந்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு தெரிவித்தது.
நீதிபதிகள்: மனுதாரரைப்போல் பலர் உரிமை கோரினால் அரசுக்கு நிதிச்சுமை ஏற்படும். கட்டணத்தை திரும்பக்கோருவது குறித்து இதுவரை வேறு யாரும் கேள்வி எழுப்பவில்லை. இம்மனு ஏற்புடையதல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டனர்.