ADDED : ஜூன் 15, 2024 06:29 AM
திருமங்கலம் : திருமங்கலம் அரசு மருத்துவமனை, அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லுாரி இணைந்து நடத்திய ரத்ததானம் முகாமில் ஓமியோபதி மருத்துவ மாணவர்கள் ரத்ததானம் செய்தனர்.
என்.எஸ்.எஸ்., மாணவர்கள் சார்பில் நடந்த இம்முகாமை அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் ராம்குமார் துவக்கி வைத்தார்.
கல்லுாரி முதல்வர் கார்த்திகேயன், என்.எஸ்.எஸ்., அலுவலர் டாக்டர் சந்தனராஜ் முன்னிலை வகித்தனர்.
50 மாணவர்கள் ரத்ததானம் செய்தனர். டாக்டர்கள், நர்சுகள், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.