ADDED : ஜூலை 07, 2024 02:31 AM

திருநகர்: தமிழ் செம்மொழிக்கு முதன்முதலாக குரல் கொடுத்த சூரிய நாராயண சாஸ்திரி என்ற பரிதி மாற் கலைஞர் பிறந்த தினம் மதுரை விளாச்சேரி நினைவிடத்தில் நடந்தது. சிலைக்கு கலெக்டர் சங்கீதா, எம்.எல்.ஏ., ராஜன்செல்லப்பா, போலீஸ் துணை கமிஷனர் கருண்கராட், தாசில்தார் செந்தாமரைவள்ளி, மாநகராட்சி மேற்கு மண்டல தலைவர் சுவிதா உள்ளிட்டோர் மாலை அணிவித்தனர்.
தமிழ்நாடு பிராமணர் சங்க மாநில கொள்கை பரப்புச் செயலாளர் ஸ்ரீகுமார், மாவட்ட தலைவர் ஜெயஸ்ரீ தலைமையில் நிர்வாகிகள் சுந்தரேசன், அன்னபூரணி, உமா, உமா குமார், வசந்த கோகிலம், கிருஷ்ணமூர்த்தி, வனிதா, நரசிம்மன், பவானி மாலை அணிவித்தனர். பரிதிமாற் கலைஞர் குடும்பத்தினர், அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ரமேஷ், ஒன்றிய செயலாளர் முருகன், நிர்வாகிகள் ஓம் சந்திரன், நெடுஞ்செழியன் பங்கேற்றனர்.
காங்., மாவட்ட செயலாளர் ஆறுமுகம், ஹார்விபட்டி ஸ்ரீமான் எஸ்.ஆர்.வி., மக்கள் நல மன்ற நிர்வாகிகள் அய்யல்ராஜ், அரவிந்தன், அண்ணாமலை, வேட்டையார், பாஸ்கர் பாண்டி, அகில இந்திய மருதுபாண்டியர் நிறுவன தலைவர் கண்ணன், நிர்வாகி சிவலிங்கம் மாலை அணிவித்தனர்.