ADDED : ஜூலை 28, 2024 06:14 AM
எழுமலை, : எழுமலை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு சைபர் கிரைம் விழிப்புணர்வு முகாம் தலைமை ஆசிரியை ஜீவா தலைமையில் நடந்தது.
சைபர் கிரைம் எஸ்.ஐ. விஜயபாஸ்கர், எழுமலை போலீசார், ''மொபைல் போன்களில் சரியான வழியில் பயன்படுத்துவது, சமூக வளைதளங்களை பார்க்கும் போது கவனிக்க வேண்டிய வழிமுறைகள், தங்கள் படங்களை பதிவேற்றுவது போன்றவற்றில் மாணவிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்'' உள்ளிட்டவை குறித்து விளக்கமளித்தனர்.