ADDED : மார் 15, 2025 05:33 AM
மதுரை: மதுரையில் மகளிர் தினம், பெண் ஆளுமைகளுக்கு விருது வழங்கும் விழா வ.உ. சிதம்பரனார் சமூக நலப் பேரவை சார்பில் நடந்தது. செயலாளர் ராம சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினர் வானொலி நிலைய முன்னாள் நிகழ்ச்சி பொறுப்பாளர் சண்முக ஞானசம்பந்தன் பெண் ஆளுமைகளான எழுத்தாளர் பகவதி மோதிலால், டாக்டர் பங்கஜவள்ளி, பேராசிரியர் சரஸ்வதி அய்யப்பன், திறன் மேம்பாடு, தன்னம்பிக்கை பயிற்றுனர் சரஸ்வதி பத்ரிநாராயணன், சமூக சேவகர் ராஜ ராஜேஸ்வரி ஆகியோருக்கு தனித்தமிழ் திருவாட்டி நீலாம்பிகை அம்மையார் விருது வழங்கினார். மகளிர் ஒருங்கிணைப்பாளர் மீனாம்பிகை நன்றி கூறினார். ஏற்பாடுகளை துணைச் செயலாளர் காளீஸ்வரன், ஆலோசகர் அருண்குமார் செய்தனர். தலைவர் சண்முகம், வ.உ.சி. பேரன் சிதம்பரம், எழுத்தாளர் திருமலை பங்கேற்றனர்.