/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அம்மிக்கல்லை தலையில் போட்டு வி.ஏ.ஓ.,வை கொல்ல முயற்சி அம்மிக்கல்லை தலையில் போட்டு வி.ஏ.ஓ.,வை கொல்ல முயற்சி
அம்மிக்கல்லை தலையில் போட்டு வி.ஏ.ஓ.,வை கொல்ல முயற்சி
அம்மிக்கல்லை தலையில் போட்டு வி.ஏ.ஓ.,வை கொல்ல முயற்சி
அம்மிக்கல்லை தலையில் போட்டு வி.ஏ.ஓ.,வை கொல்ல முயற்சி
ADDED : மார் 14, 2025 01:16 AM

திருமங்கலம்:மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா மேல உரப்பனுார் வி.ஏ.ஓ., முத்துப்பாண்டி, 45. திருமங்கலம் மம்சாபுரத்தை சேர்ந்தவர் ராஜா முகமது, 45, மனைவி சம்ரத்பீவி, 42. இவர்களுக்கு ரபிக் முகமது, 19, மற்றும் 16 வயது மகன் உள்ளனர். குடும்ப பிரச்னையில் சம்ரத்பீவி, தன் மகன்களோடு தனியாக வசிக்கிறார்.
இந்நிலையில், இட பிரச்னை தொடர்பாக வி.ஏ.ஓ., முத்துப்பாண்டியை சம்ரத்பீவி சந்தித்தபோது, வாய் தகராறு ஏற்பட்டது. தகவலறிந்த சம்ரத்பீவி மகன்கள், நேற்று முன்தினம் இரவு முத்துப்பாண்டி வீட்டிற்கு சென்றனர். பின்பக்க கதவை உடைத்து உள்ளே சென்றவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, முத்துப்பாண்டி தலை மீது அம்மிக்கல்லை, ரபீக் முகமது போட்டார்.
வி.ஏ.ஓ., மனைவி அலறல் கேட்டு அருகில் வசித்தவர்கள், சகோதரர்களை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். மதுரை அரசு மருத்துவமனையில் முத்துப்பாண்டி சிகிச்சையில் உள்ளார். போலீசார் விசாரிக்கின்றனர்.