போதைப்பொருள் எதிர்ப்பு தின ஊர்வலம்
போதைப்பொருள் எதிர்ப்பு தின ஊர்வலம்
போதைப்பொருள் எதிர்ப்பு தின ஊர்வலம்

மேலுார்
மேலுாரில் மதுவிலக்கு, சட்டம் ஒழுங்கு போலீசார் இணைந்து அரசு இருபாலர் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடத்தினர். டி.எஸ்.பி., சிவசுப்பு தலைமை வகித்தார். மாணவர்கள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
வாடிப்பட்டி
டி.மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சந்திரன் தலைமை வகித்தார். ஆசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். வாடிப்பட்டி எஸ்.ஐ., கணேஷ்குமார், போலீஸ் குணசேகரன் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேச்சு,கட்டுரை, கவிதை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர். உடற்கல்வி ஆசிரியர் ராஜன் நன்றி கூறினார்.
உசிலம்பட்டி
உசிலம்பட்டி நாடார் சரஸ்வதி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் போலீசார் சார்பில் நடந்த ஊர்வலத்தில் டி.எஸ்.பி., செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, தலைமை ஆசிரியர் பரமசிவம், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
திருமங்கலம்
பி.கே.என்., பள்ளியில் இருந்து கிளம்பிய ஊர்வலத்தை டி.எஸ்.பி., அருள் தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர்கள் லட்சுமி லதா, அருண், எஸ்.ஐ.,க்கள் ஜெயக்குமார், பரமசிவம், கருணாகரன், மற்றும் போலீசார், பி.கே.என்., பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.