Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ அரசின் தொழில்முனைதல் திட்டங்களை பயன்படுத்துங்கள் புத்தாக்க முகாமில் மாணவர்களுக்கு அறிவுரை

அரசின் தொழில்முனைதல் திட்டங்களை பயன்படுத்துங்கள் புத்தாக்க முகாமில் மாணவர்களுக்கு அறிவுரை

அரசின் தொழில்முனைதல் திட்டங்களை பயன்படுத்துங்கள் புத்தாக்க முகாமில் மாணவர்களுக்கு அறிவுரை

அரசின் தொழில்முனைதல் திட்டங்களை பயன்படுத்துங்கள் புத்தாக்க முகாமில் மாணவர்களுக்கு அறிவுரை

ADDED : ஆக 07, 2024 05:40 AM


Google News
Latest Tamil News
மதுரை : ''அரசின் தொழில் முனைதல் திட்டங்களை மாணவர்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்'' என தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனத்தின் (இ.டி.ஐ.ஐ.,) இயக்குனர் அம்பலவாணன் அறிவுறுத்தினார்.

இ.டி.ஐ.ஐ., சார்பில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளுக்கான உருவளிக்கும் முகாம் மதுரை அண்ணா பல்கலை மண்டல வளாகத்தில் நடந்தது. டீன் லிங்கதுரை தலைமை வகித்தார்.

நிறுவனத்தின் மாநில திட்ட மேலாளர் சண்முகராஜ் வரவேற்றார். முதன்மைப் பயிற்றுனர் ராமச்சந்திரன் முகாம் குறித்து விளக்கினார்.

இயக்குனர் அம்பலவாணன் பேசியதாவது:

உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு ஆண்டு தோறும் புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டிகள் நடத்தப்படுகின்றன. சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது. இதன்மூலம் பொறியியல், வேளாண்மை, கால்நடை மருத்துவம், மீன்வளம், கலை அறிவியல், தொழில்நுட்பம், தொழில் பயிற்சி நிறுவனம் என 1716 உயர்கல்வி நிறுவனங்கள் பயன்பெறுகின்றன.

இந்தாண்டு 9 ஆயிரத்து 355 மாணவ அணிகளிடம் இருந்து புத்தாக்க சிந்தனைகள் பெறப்பட்டுள்ளன. அதில் 474 அணிகளில் இருந்து 1790 மாணவர்களை தேர்வு செய்து, அவர்களின் கண்டுபிடிப்புகளுக்கு உருவளிக்கும் முகாம் தமிழகம் முழுவதும் 17 இடங்களில் நடக்கிறது.

இதில் தேர்வு செய்யப்படும் சிறந்த கண்டுபிடிப்புகளுக்கு மாதிரி தயாரிப்பு செய்ய ரூ.50 ஆயிரம் வரை நிதியுதவி அளிக்கப்படுகிறது.இதுபோன்ற தொழில்முனைதல் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்தி, தொழில்முனைவோராக உருவாக வேண்டும் என்றார். ஒருங்கிணைப்பாளர் அர்ச்சனா நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us