பேரையூர்: மதுரை மேற்கு மாவட்ட பா.ஜ., நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமையில் பேரையூரில்ஆலோசனைக் கூட்டம்நடந்தது. இதில் மும்மொழிக் கொள்கை பற்றி விவாதித்தனர். நிர்வாகிகள் நியமனம், பூத் கமிட்டி சம்பந்தமாக ஆலோசனை செய்தனர்.
அமைப்புசாரா மக்கள் சேவை பிரிவு தலைவர் சோமசுந்தரம், ஒன்றிய தலைவர் கருப்பையா கலந்து கொண்டனர்.