உசிலம்பட்டி: உசிலம்பட்டி டி.எஸ்.பி., செந்தில்குமார் தலைமையில் போக்குவரத்தை சீர்படுத்த ஆலோசனை கூட்டம் நடந்தது. வட்டார போக்குவரத்து ஆய்வாளர் சுகந்தி, இன்ஸ்பெக்டர் அருள்சேகர், போலீசார், வர்த்தகர்கள், ஆட்டோ சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
விதிமுறைப்படி ஆட்டோக்கள் இயக்க வேண்டும். தங்களுக்கான இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும். கனரக வாகனங்களில் இருந்து பொருட்களை கடைகளுக்கு, அனுமதிக்கப்பட்ட மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரை மற்றும் இரவு 10:00 மணிக்கு மேல் மட்டுமே இறக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசித்தனர்.