/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கப்பலுார் டோல்கேட் விவகாரம் மக்களுக்காக அ.தி.மு.க., போராடும் உதயகுமார் உறுதி கப்பலுார் டோல்கேட் விவகாரம் மக்களுக்காக அ.தி.மு.க., போராடும் உதயகுமார் உறுதி
கப்பலுார் டோல்கேட் விவகாரம் மக்களுக்காக அ.தி.மு.க., போராடும் உதயகுமார் உறுதி
கப்பலுார் டோல்கேட் விவகாரம் மக்களுக்காக அ.தி.மு.க., போராடும் உதயகுமார் உறுதி
கப்பலுார் டோல்கேட் விவகாரம் மக்களுக்காக அ.தி.மு.க., போராடும் உதயகுமார் உறுதி
ADDED : ஜூலை 10, 2024 04:46 AM
திருமங்கலம் : கப்பலுார் டோல்கேட் விவகாரத்தில் மக்களுக்கு உறுதுணையாக அ.தி.மு.க., போராடும் என திருமங்கலம் எம்.எல்.ஏ.,வும், சட்டசபை எதிர்க்கட்சி துணைத்தலைவருமான உதயகுமார் கூறினார்.
டோல்கேட் விவகாரம் தொடர்பாக உதயகுமாரிடம் திருமங்கலம் வாகன ஓட்டிகள் சங்கம், நகர் வியாபாரிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மனு அளித்தனர்.
உதயகுமார் கூறியதாவது: விதிமீறி அமைக்கப்பட்ட கப்பலுார் டோல்கேட்டை அகற்ற பாடுபடுவேன் என்று சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்போது முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதுவரை அகற்றவில்லை. இதுகுறித்து நாங்கள் போராடினால் கைது செய்யப்படும் சூழல் உள்ளது. உள்ளூர் வாகனங்கள் 50 சதவீத கட்டணம் செலுத்த வேண்டும் என்ற தகவல் போராட துாண்டுவதாக உள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் மத்திய அரசிடம் பேசி உள்ளூர் வாகனங்களுக்கு கட்டண சலுகை அளிக்கப்பட்டது.
தற்போது டோல்கேட்டை அகற்ற அனைத்து தரப்பு மக்கள், தொழிலாளர்கள், பல்வேறு சங்கங்கள்,தொழில் நிறுவனங்கள் கூறி வருகின்றனர். ஆனால் தி.மு.க., அரசு அக்கறை செலுத்தவில்லை. 60 கி.மீ.,க்குள் உள்ள டோல்கேட்டை அகற்ற மத்திய அரசு அனுமதி வழங்கியது. அதை பயன்படுத்தி அகற்றி இருக்க வேண்டும். இந்த பிரச்னையில் மக்களுக்கு உறுதுணையாக அ.தி.மு.க., போராடும்.
தமிழகத்தில் போதை கலாசாரம், கள்ளச்சாராயம் தலைவிரித்து ஆடுகிறது. கள்ளச்சாராயத்தால் 68 பேர் பலியாகினர். தேசிய கட்சியின் மாநில தலைவர் படுகொலை செய்யப்படுகிறார். ஆனால் இதற்கு போலீஸ் கமிஷனரை மாற்றி விட்டு பிரச்னைக்கு தீர்வு கண்டோம் என்ற தோற்றத்தை முதல்வர் ஏற்படுத்துகிறார். சட்டசபையில் எதிர்க்கட்சிகளுக்கு பேச வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எதிர்க்கட்சியின் குரல் நசுக்கப்படுகிறது என்றார்.