ADDED : ஜூலை 30, 2024 05:47 AM
பேரையூர் : பேரையூரில் அ.தி.மு.க., சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக துண்டு பிரசுரங்கள்வழங்கும் நிகழ்ச்சி முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் கருப்பையா, மாணிக்கம், நிர்வாகிகள் பாவடியான், வழக்கறிஞர் தமிழ்ச்செல்வம், நெடுமாறன் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் வக்கீல் பாஸ்கரன் செய்திருந்தார்.