குன்றத்தில் ஆடிக் கார்த்திகை விழா
குன்றத்தில் ஆடிக் கார்த்திகை விழா
குன்றத்தில் ஆடிக் கார்த்திகை விழா
ADDED : ஜூலை 30, 2024 05:48 AM

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றத்தில் ஆடிக் கார்த்திகையை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் குவிந்ததால் ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
சுவாமி புறப்பாடு
வழக்கமாக மாத கார்த்திகை அன்று சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மாலையில் கோயிலில் இருந்து புறப்பாடாகிய ரத வீதிகளில் உலா நிகழ்ச்சி நடக்கும். ஆடிக் கார்த்திகையை முன்னிட்டு நேற்று காலை கோயிலில் இருந்து உற்ஸவர்கள் புறப்பாடாகி சன்னதி தெரு ஆடிக் கார்த்திகை மண்டபத்தில் எழுந்தருளினர்.
மாலையில் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரமாகி, பூஜை முடிந்து தங்கமயில் வாகனத்தில் ரத வீதிகளில் புறப்பாடாகினர்.
கலை நிகழ்ச்சிகள்
மதுரை மண்டல கலை பண்பாட்டு மையம், தென்னக பண்பாட்டு மையம் தஞ்சாவூர் சார்பில் திருப்பரங்குன்றத்தில் ஆடிக் கார்த்திகை விழா நடந்தது. மதுரை மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.
சுற்றுலா அலுவலர் ஸ்ரீ பாலமுருகன், மதுரை அரசு மியூசிய காப்பாட்சியர் மருது பாண்டியன் பேசினர். ஒயிலாட்டம், காவடியாட்டம்,மாடாட்டம், பரதநாட்டியம், வில்லுப்பாட்டு என கலை நிகழ்ச்சிகள் நடந்தன.