Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ கல்லுாரி மாணவருக்கு கல்வியிடைப் பயிற்சி

கல்லுாரி மாணவருக்கு கல்வியிடைப் பயிற்சி

கல்லுாரி மாணவருக்கு கல்வியிடைப் பயிற்சி

கல்லுாரி மாணவருக்கு கல்வியிடைப் பயிற்சி

ADDED : ஜூலை 02, 2024 05:56 AM


Google News
மதுரை : மதுரை அரசு மியூசியத்தில் கல்லுாரி மாணவர்களுக்கு கல்வி இடைப்பயிற்சி கடந்த மாதம் நடத்தப்பட்டது.

இதில் பங்கேற்றவர்களுக்கு கலெக்டர் சங்கீதா சான்றிதழ் வழங்கினார். டி.ஆர்.ஓ., சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர். இப்பயிற்சியில் தியாகராஜர் கல்லுாரி, சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லுாரி, வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரிகளின் தமிழ், வரலாற்றுத்துறை மாணவர்கள் பங்கேற்றனர்.

இவர்களுக்கு தமிழி எழுத்துகள், வட்டெழுத்துகள், கிரந்த எழுத்துகளின் தோற்றம், வளர்ச்சி, வீழ்ச்சி, எழுத்துப் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. கோயில், கட்டடம், சிற்பக்கலைகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. யானைமலை, உதயகிரீஸ்வரர் குடைவரைக் கோயில், குன்னத்துார் தமிழி கல்வெட்டு, நரசிங்கமங்கலம் குடைவரை கோயில், யானைமலை சமண சிற்பங்கள் உட்பட பல இடங்களுக்கும் அழைத்து சென்று பயிற்சி அளிக்கப்பட்டது. காப்பாட்சியர் மருதுபாண்டியன் பயிற்சியை ஒருங்கிணைத்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us