ADDED : ஜூலை 06, 2024 06:19 AM

மதுரை: மதுரை ஆவின் நிறுவனம் பால், உப பொருட்ளின் விலையை ரூ.2 குறைத்துள்ளது. கொழுப்பு நீக்கப்பட்ட பாலை 450 மி.லி., ரூ.30ல் இருந்து ரூ.28க்கும், 150 மி.லி., பால் ரூ.12ல் இருந்து ரூ.10க்கும் விற்கப்படுகிறது. மேலும் பனீர் 200 கிராம் விலை ரூ.120ல் இருந்து ரூ.110க்கும், 500 கிராம் பனீர் ரூ.300ல் இருந்து ரூ.275க்கும் குறைத்து விற்கப்படுகிறது.
இந்த தள்ளுபடி விலை ஜூலை 31 வரை நடைமுறையில் இருக்கும் என பொது மேலாளர் சிவகாமி தெரிவித்துள்ளார்.