ADDED : ஜூலை 22, 2024 05:27 AM
மதுரை: ஜூலை 21 -- 31 வரை யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியக் குழுவின் 46வது அமர்வை டெல்லியில் நடத்துவதால், சுற்றுலா அமைச்சகத்தின் தென் மண்டல அலுவலகம், இந்தியாவின் வளமான பாரம்பரியத் தளங்கள் பற்றிய விழிப்புணர்வை ஊக்குவித்து வருகிறது.
இதையொட்டி, 'யுவா டூரிசம் கிளப்' உறுப்பினர்கள், சுற்றுலா பயணிகளுக்கு திருப்பரங்குன்றத்தின் பாரம்பரிய இடங்களுக்கு நடைபயணம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்திய சுற்றுலாக்கழகம், மகாத்மா காந்தி யோகா நிறுவனம் இணைந்து நடத்திய பராம்பரிய நடைப்பயணத்தில் 130 பேர் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றத்தின் வரலாற்றுக் கண்ணோட்டம் என்ற தலைப்பில் பாலசுப்பிரமணியன் பேசினார். இதில் மாணவர்களுக்கு 'ஜெயின் ராக் கட்' குகைகள், வழிகாட்டுதல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மகாத்மா காந்தி யோகா நிறுவன ஒருங்கிணைப்பாளர் பாரதி வரவேற்றார்.
இந்திய சுற்றுலா கழக துணை இயக்குநர் வேல் முருகன் நன்றி கூறினார். சுற்றுலா அலுவலர் கோபிநாத், மகாத்மா காந்தி யோகா நிறுவன இயக்குனர் கங்காதரன் ஏற்பாடுகளை செய்தனர்.