ADDED : ஜூலை 03, 2024 05:59 AM
மதுரை : 'ஆடிப்பட்டத்தில் விதைப்பதற்கான காய்கறி, சிறுதானிய பயிர்களுக்கான விதைகளை லைசென்ஸ் பெற்ற அரசு மற்றும் தனியார் விதை விற்பனை நிலையங்களில் வாங்க வேண்டும்' என விதை ஆய்வு துணை இயக்குநர் வாசுகி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது: விதைப்பைகளில் உள்ள விவரங்களை சரிபார்த்து விற்பனை ரசீது கேட்டு வாங்க வேண்டும். விதை மூலம் பயிர்களுக்கு உருவாகும் பிரச்னைகளை விற்பனை ரசீது மூலம் தீர்க்கலாம். சாதாரண கடைகளில் விற்கப்படுபவை உணவுக்காக மட்டுமே. அவற்றை வாங்கி விதைத்தால் போதுமான முளைப்புத்திறன் இருக்காது. பூ, காய் மகசூல் குறையும் வாய்ப்புள்ளது. மண்ணில் போதுமான ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்த பின்பே விதைக்க வேண்டும்.
விதை விற்பனையாளர்கள் கடைகளின் முன்பாக விதை இருப்பு, விலை, விதை விவரப்பட்டியலை அறிவிப்பு பலகையில் குறிப்பிட வேண்டும். விதை வாங்கும் விவசாயிகளின் ரசீது நகல்களை பராமரிக்க வேண்டும். பதிவேடு பராமரிக்காத, தரமற்ற விதைகளை விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.