/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 75 முறை முட்டியும் அசராத கிடாவுக்கு பரிசு 75 முறை முட்டியும் அசராத கிடாவுக்கு பரிசு
75 முறை முட்டியும் அசராத கிடாவுக்கு பரிசு
75 முறை முட்டியும் அசராத கிடாவுக்கு பரிசு
75 முறை முட்டியும் அசராத கிடாவுக்கு பரிசு
ADDED : ஜூலை 21, 2024 05:10 AM

விக்கிரமங்கலம்: விக்கிரமங்கலம் அருகே கல்புளிச்சான்பட்டியில் கிடா முட்டு போட்டி நடந்தது. 80 ஜோடிகள் பங்கேற்றன. கால்நடை டாக்டர்கள் கீர்த்தனா, தேசிங்கு ராஜா உள்ளிட்ட மருத்துவ குழுவினர் பரிசோதித்த பின் போட்டிகளில் பங்கேற்க கிடாய்கள் அனுமதிக்கப்பட்டன.
75 முறை முட்டி அசராமல் நின்ற கிடாய்க்கு 10 கிலோ பித்தளை அண்டா, சமன் செய்த இரண்டு கிடாய்களுக்கு தலா 5 கிலோ பித்தளை அண்டா வழங்கப்பட்டது. முன்னாள் எம்.எல்.ஏ., கதிரவன், ஊராட்சி தலைவர் கலியுக நாதன், செல்லம்பட்டி ஒன்றிய சேர்மன் கவிதா, துணை சேர்மன் மணிகண்டன் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை வீரசிங்கம், முத்துப்பாண்டி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.