ADDED : ஜூலை 10, 2024 04:26 AM

ஆக்கிரமிப்புகளை அகற்றுங்க
மதுரை தெற்குவாசல் சின்ன கடை வீதியில் கடைகள் வாகனங்கள் ரோட்டில் நிற்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. வாகனங்கள் சென்று வர சிரமமாக உள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அசோக், தெற்குவாசல்
மின் விளக்கு எரியவில்லை
மதுரை ஆழ்வார்புரம் புது நத்தம் பகுதி பூங்கா அருகே அமைக்கப்பட்ட ஹைமாஸ் விளக்கு எரியாமல் இருப்பதால் இரவில் மக்கள் சிரமப்படுகின்றனர். அதிகாரிகள் விளக்கை சரி செய்ய வேண்டும்.
- ராஜா, ஆழ்வார்புரம்.
கட்டடத்தில் அரசமரம்
மன்னாடிமங்கலம் சச்சிதானந்தம் பிள்ளை நினைவு அரசு மருத்துவமனை கட்டடத்தின் மேல் அரச மரம் முளைத்து கட்டடத்தை சேதமாக்கும் நிலையுள்ளது. இதனை அகற்ற தக்க நடவடிக்கை வேண்டும்.
- மோகன், மன்னாடிமங்கலம்.
மின் விளக்கு வேண்டும்
மதுரை பசுமலை பகுதி பெரக்கா நகரிலுள்ள கே.ஆர்.பி நகர் பகுதியில் மின் விளக்கு பழுதடைந்துள்ளதால் அப்பகுதியில் மக்கள் நடந்து செல்ல முடியாமல் தவிக்கின்றனர். மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- அன்பரசி, பசுமலை.
வாய்க்காலின் சுவரை
உயர்த்த வேண்டும்
மதுரை காலாங்கரை கிழக்கு மேற்கு பகுதிகளில் உள்ள வாய்க்கால் ரோட்டின் நடுவே எந்த ஒரு தடுப்பும் இல்லாமல் இருப்பதால் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் நிலையுள்ளது. இரு பக்கமும் தடுப்புச் சுவரை உயர்த்த வேண்டும்.
- முருகேசபாண்டியன், ஜே.என்.கே. நகர்
தண்ணீர் தேக்கம்
ஆரப்பாளையம் ராஜா மில் ரோடு பகுதியில் தண்ணீர் ரோட்டில் தேங்கி நிற்பதால் மக்கள் அப்பகுதியில் நடந்து செல்ல சிரமப்படுகின்றனர். மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் சரிசெய்ய வேண்டும்.
- மணி, ஆரப்பாளையம்.
ரோட்டை சீரமைக்க வேண்டும்
கீழக்குயில்குடி தட்டனுார் நான்கு வழிச்சாலை முதல் சீனிவாச காலனி பிரதான சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். இதனால் பஸ் இயக்கப்படாமல் இருப்பதால் மக்கள் தவிக்கின்றனர்.
- சரவணன், தட்டனுார்.