ADDED : ஜூலை 02, 2024 05:58 AM

மதுரை : மதுரை காமராஜ் பல்கலை பெண்கள் விடுதியில் நேற்றுமுன்தினம் இரவு ஒருவர் அத்துமீறி நுழைந்தார். அவரை காவலாளி தடுத்தபோது போதையில் இருந்தது தெரிந்தது.
போலீசார் விசாரித்தனர். அவர் அப்பகுதியைச் சேர்ந்தவர் என்றும், உறவினரை பார்க்க வந்தபோது நாய் குரைத்ததால் பயந்து விடுதிக்குள் நுழைந்ததாகவும் தெரிவித்தார். ஏற்கனவே 3 முறை இரவில் மர்மநபர்கள் வந்ததாகவும், புகார் கொடுத்தற்கு போலீசார் நடவடிக்கை எடுக்காததாகவும் மாணவியர் குற்றம்சாட்டினர்.