Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ரயில்வே கேட்டில் 74 வாகனங்கள் மோதல்

ரயில்வே கேட்டில் 74 வாகனங்கள் மோதல்

ரயில்வே கேட்டில் 74 வாகனங்கள் மோதல்

ரயில்வே கேட்டில் 74 வாகனங்கள் மோதல்

ADDED : ஜூன் 07, 2024 06:31 AM


Google News
மதுரை: மதுரையில் ரயில்வே சார்பில் நடந்த உலக லெவல் கிராசிங் தின விழிப்புணர்வு பிரசாரத்திற்கு முதுநிலை கோட்ட பாதுகாப்பு அதிகாரி மொகைதீன் பிச்சை தலைமை வகித்தார்.

ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா பேசியதாவது: கடந்தாண்டில் மதுரை ரயில்வே கோட்ட பகுதியில் பூட்டிய ரயில்வே கேட்டுகளில் மோதி விபத்து ஏற்படுத்திய 74 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கவனக்குறைவால் விபத்து நடப்பது தொடர்கிறது. இதுபோன்ற குற்றச்செயல்களுக்கு ரயில்வே சட்டப்படி 5 ஆண்டுகள் சிறையும், ரயில்வே கேட் ஊழியர்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் 6 மாத சிறையும் அபராதம் விதிக்கப்படும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us