வாலிபர் கொலையில் மேலும் 5 பேர் கைது
வாலிபர் கொலையில் மேலும் 5 பேர் கைது
வாலிபர் கொலையில் மேலும் 5 பேர் கைது
ADDED : ஜூன் 30, 2024 05:02 AM
பேரையூர : அருப்புக்கோட்டை கோவிலாங்குளம் மாரிமுத்து மகன் அழகேந்திரன் 21. இவர் சில நாட்களுக்கு முன் டி.கல்லுப்பட்டி அருகே சத்திரப்பட்டியில் சீமைகருவேல மரங்கள் உள்ள காட்டுப் பகுதியில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
இதை அடுத்து பேரையூர் தாலுகா வெங்கடாசலபுரம் முத்துவேல் மகன் பிரபாகரன் 25. சத்திரப்பட்டி போலீசாரிடம் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரித்த போது. தாய்மாமன் மகளை அழகேந்திரன் காதலித்ததாகவும் அதற்குப் பழி வாங்க கொலை செய்ததாகவும் தெரிவித்தார்.
அழகேந்திரன் உறவினர்கள் இது ஆணவக் கொலை என்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று உடலை வாங்க மறுத்து மதுரை அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொலைக்கு உடந்தையாக இருந்த பேரையூர் தாலுகா வி.அம்மாபட்டி பிரகாஷ்குமார் 21. முத்துகண்ணன் 18. டி.கல்லுப்பட்டி ராமுண்ணிநகரைச் சேர்ந்த 17 வயது சிறுவன். கோவிலாங்குளம் சீனிவாசன் 45. வெங்கடாசலபுரம் முருகன் 18, ஐந்து பேரை கைது செய்தனர்.
சரணடைந்த பிரபாகரன் பாத்ரூமில் வழுக்கி விழுந்து மாவுக்கட்டுடன் சிறையில் உள்ளார்.