ADDED : ஜூன் 20, 2024 04:58 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி தாலுகா அலுவலகத்தில் ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் தலைமையில் ஜமாபந்தி 5 நாட்கள் நடந்தன.
தாசில்தார் சுரேஷ் பிரடரிக்கிளமண்ட், வருவாய்த்துறை அலுவலர்கள் பட்டா மாறுதல் உட்பட 406 மனுக்கள் பெற்றனர். 60 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள் மீது விசாரணை நடத்தி குறுகிய காலத்தில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.