/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலையில் தந்தை, மகன்கள் உட்பட 4 பேர் கைது * தப்பி ஓடிய கொலையாளிகளுக்கு கால் முறிவு நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலையில் தந்தை, மகன்கள் உட்பட 4 பேர் கைது * தப்பி ஓடிய கொலையாளிகளுக்கு கால் முறிவு
நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலையில் தந்தை, மகன்கள் உட்பட 4 பேர் கைது * தப்பி ஓடிய கொலையாளிகளுக்கு கால் முறிவு
நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலையில் தந்தை, மகன்கள் உட்பட 4 பேர் கைது * தப்பி ஓடிய கொலையாளிகளுக்கு கால் முறிவு
நாம் தமிழர் கட்சி நிர்வாகி கொலையில் தந்தை, மகன்கள் உட்பட 4 பேர் கைது * தப்பி ஓடிய கொலையாளிகளுக்கு கால் முறிவு
ADDED : ஜூலை 18, 2024 11:33 PM

மதுரை:மதுரையில் 'வாக்கிங்' சென்ற நாம் தமிழர் கட்சி வடக்கு தொகுதி துணைச் செயலாளர் பாலமுருகன் 50, கொலையில் துாண்டுதலாக இருந்த உறவினர் மகாலிங்கம், அவரது 2 மகன்கள், கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த நண்பர் கைது செய்யப்பட்டனர்.
மதுரை செல்லுார் பாலமுருகன் ஜூலை 16 அதிகாலை தல்லாகுளம் வல்லபாய் ரோட்டில் 'வாக்கிங்' சென்றபோது 4 பேரால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். விசாரணையில் அவரது தம்பி பாண்டியராஜனுக்கும், தம்பியின் சம்பந்தி வீட்டாருக்கும் இடையேயான சொத்து பிரச்னையில் பாலமுருகன் தலையிட்டதால் கொலை செய்யப்பட்டது தெரிந்தது.
இவ்வழக்கில் தலைமறைவாக இருந்த சம்பந்தி செல்லுார் அகிம்சாபுரம் மகாலிங்கம் 54, அவரது மகன்கள் அழகுவிஜய், 22, சுந்தரமூர்த்தி, 22, மற்றும் கொலையாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததாக தனியார் மருத்துவமனை ஊழியர் சிட்டம்பட்டி சந்தன மகாலிங்கம், 22, ஆகியோரை தல்லாகுளம் போலீசார் கைது செய்தனர்.
இதற்கிடையே சம்பவத்தன்று கூலிப்படையாக செயல்பட்ட கொலையாளிகளான வில்லாபுரம் பரத், 22, பொதும்பு பென்னி, 19, சுப்பிரமணியபுரம் கோகுலகண்ணன், 18, மற்றும் 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டனர். இதில் சிறுவனை தவிர மற்றவர்கள், போலீஸ் பிடியில் இருந்து தப்பித்து ஓடும்போது கால் முறிவு ஏற்பட்டது. மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.