/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நான்கு மாநகராட்சிகளில் 19 பேருக்கு பதவி உயர்வு நான்கு மாநகராட்சிகளில் 19 பேருக்கு பதவி உயர்வு
நான்கு மாநகராட்சிகளில் 19 பேருக்கு பதவி உயர்வு
நான்கு மாநகராட்சிகளில் 19 பேருக்கு பதவி உயர்வு
நான்கு மாநகராட்சிகளில் 19 பேருக்கு பதவி உயர்வு
ADDED : மார் 11, 2025 08:48 AM
மதுரை : மதுரை உட்பட 4 மாநகராட்சிகளில் 19 பேருக்கு தொழில் நுட்ப உதவியாளர்களாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மதுரை, சேலம், ஈரோடு, ஓசூர் ஆகிய மாநகராட்சிகளில் பட்டயப்படிப்பு கல்வித்தகுதியுடன் 5 ஆண்டுகள் பணிமுடித்து, தேர்ச்சி திறன் உதவியாளர் நிலை 1, தேர்ச்சி திறன் உதவியாளர் நிலை 2 ஆக பணியாற்றிய 19 பேருக்கு தொழில்நுட்ப உதவியாளர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி மதுரையில் 11 பேர், சேலம் 5, ஈரோடு 2, ஓசூர் 1 பேர் பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதற்கான உத்தரவை நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராஜ் பிறப்பித்துள்ளார். மாநகராட்சி அலுவலகங்களில் பதவி உயர்வுக்காக காத்திருந்த நிலையில் இந்நடவடிக்கையை அலுவலர்கள் வரவேற்றுள்ளனர்.