ADDED : மார் 13, 2025 05:21 AM
விக்கிரமங்கலம்: மலையூர் கணேசன் மனைவி மலர்கொடி 36. இவர் நேற்று மாலை மகளுடன் ரெட்டியபட்டிக்கு டூவீலரில் சென்றார்.
நரியம்பட்டி பிரிவு அருகே டூவீலரில் ஹெல்மெட் அணிந்து வந்த நபர் இருவரையும் கீழே தள்ளிவிட்டு மலர்கொடி கழுத்தில் அணிந்திருந்த 12.5 பவுன் தாலி செயினை பறித்து தப்பினார். கீழே விழுந்ததில் தாய், மகள் காயமடைந்தனர்.
விக்கிரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.