ADDED : ஜூலை 04, 2025 01:09 AM
கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி அடுத்த தம்மண்டரப்பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன், 28, பொக்லைன் ஆப்பரேட்டர்.
இவர், கடந்த, 1ம் தேதி இரவு, ஹோண்டா லிவோ பைக்கில், கொத்தகிருஷ்ணப்பள்ளி அருகே குருபரப்பள்ளி சாலையில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த பைக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், படுகாயமடைந்த சீனிவாசன் பலியானார். வேப்பனஹள்ளி போலீசார் விசாரிக்கின்றனர்.