/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ வியாபாரி வீட்டில் 6 பவுன், பணம் திருடிய வாலிபர் கைது வியாபாரி வீட்டில் 6 பவுன், பணம் திருடிய வாலிபர் கைது
வியாபாரி வீட்டில் 6 பவுன், பணம் திருடிய வாலிபர் கைது
வியாபாரி வீட்டில் 6 பவுன், பணம் திருடிய வாலிபர் கைது
வியாபாரி வீட்டில் 6 பவுன், பணம் திருடிய வாலிபர் கைது
ADDED : செப் 20, 2025 01:34 AM
போச்சம்பள்ளி :தேங்காய் வியாபாரி வீட்டில், நகை, பணம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த பேரூஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செல்வகணபதி, 45, தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த, 16ல் இவர் வியாபாரத்திற்காக வெளியே சென்றிருந்தார். அவரது மனைவி வினிதா, 40, வீட்டை பூட்டாமல் அருகில் குழந்தைகளுடன் இருந்தார். அன்று வீட்டில் இருந்த, 6 பவுன் நகை, 80 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
இதுகுறித்து அளித்த புகார்படி, நாகரசம்பட்டி போலீசார் தனிப்படை அமைத்து குற்றாவாளியை தேடி வந்தனர். இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் பையூர், ஜெகதாப் அடுத்த, வெல்லாரம்பட்டியை சேர்ந்த முத்துகுமார், 26, திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, 5 பவுன் நகை மட்டும் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.