/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கள்ளக்காதலிக்கு செலவழித்த கணவரை கொன்ற மனைவி கள்ளக்காதலிக்கு செலவழித்த கணவரை கொன்ற மனைவி
கள்ளக்காதலிக்கு செலவழித்த கணவரை கொன்ற மனைவி
கள்ளக்காதலிக்கு செலவழித்த கணவரை கொன்ற மனைவி
கள்ளக்காதலிக்கு செலவழித்த கணவரை கொன்ற மனைவி
ADDED : ஜூன் 14, 2025 06:20 AM
காவேரிப்பட்டணம்: கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அடுத்த திம்மாபுரம் பஞ்.,க்குட்பட்ட நேருபுரத்தை சேர்ந்தவர் ரங்கசாமி, 47; கூலி தொழிலாளி. இவரது மனைவி கவிதா, 44. ரங்கசாமிக்கும், தர்மபுரி மாவட்டம், காரிமங்கலத்தை சேர்ந்த மஞ்சுளா என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. இதனால், கவிதா தன் கணவருடன் அடிக்கடி தகராறு செய்தார்.
ஜூன் 9ம் தேதி இரவு, 11:00 மணியளவில் வீட்டின் மேல் மாடியில் துாங்கிய ரங்கசாமி மீது, கவிதா மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்தார். இதில், ரங்கசாமி உயிரிழந்தார். காவேரிப்பட்டணம் போலீசார், கவிதாவை தேடிய நிலையில், நேற்று முன்தினம் திருப்பதியில் உள்ள உறவினர் வீட்டில் கைது செய்யப்பட்டார்.
தன் கணவர், வீட்டில் இருந்த, 80 சவரன் நகைகளை விற்று மஞ்சுளாவுக்கு செலவு செய்ததாகவும், நிலத்தையும், சொந்த வீட்டையும் விற்று விட்டதாகவும், இதனால், ஆத்திரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக் கொலை செய்ததாகவும் அவர் போலீசில் தெரிவித்துள்ளார்.