/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கணவரை அடித்து கொன்ற மனைவிக்கு 10 ஆண்டு சிறை கணவரை அடித்து கொன்ற மனைவிக்கு 10 ஆண்டு சிறை
கணவரை அடித்து கொன்ற மனைவிக்கு 10 ஆண்டு சிறை
கணவரை அடித்து கொன்ற மனைவிக்கு 10 ஆண்டு சிறை
கணவரை அடித்து கொன்ற மனைவிக்கு 10 ஆண்டு சிறை
ADDED : ஜூன் 26, 2025 02:26 AM
ஓசூர், தேன்கனிக்கோட்டை அருகே, கணவரை அடித்து கொன்ற மனைவிக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கி, ஓசூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே கலகோபசந்திரத்தை சேர்ந்தவர் பாப்பிரெட்டி, 48. இவர் மனைவி மஞ்சுளா, 45. இவர்களுக்கு, 12 வயதில் மகன் உள்ளார். மதுபோதைக்கு அடிமையான பாப்பிரெட்டி, மனைவியிடம் அடிக்கடி தகராறு செய்து, வீட்டிலேயே சிறுநீர் கழித்து அசிங்கப்படுத்தி வந்தார். கடந்தாண்டு, 2024 ஜூன், 9ம் தேதி இரவு, சமையலறையில் பாப்பிரெட்டி சிறுநீர் கழித்ததால், தம்பதிக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில், களி கிண்டும் கட்டையால் பாப்பிரெட்டி, மனைவி மஞ்சுளாவை அடித்தார்.
ஆத்திரமடைந்த மஞ்சுளா, கட்டையை பிடுங்கி, கணவரின் தலை உள்ளிட்ட பல இடங்களில் தாக்கி கொன்றார். தேன்கனிக்கோட்டை போலீசார் மஞ்சுளாவை கைது செய்தனர். இந்த வழக்கு, ஓசூர் கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி சந்தோஷ், குற்றம் சாட்டப்பட்ட மஞ்சுளாவிற்கு, 10 ஆண்டு சிறை தண்டனை, 1,000 ரூபாய் அபராதம், கட்ட தவறினால் மேலும், 6 மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
அரசு தரப்பில் வக்கீல் சின்னபில்லப்பா ஆஜரானார். சம்பவம் நடந்த ஓராண்டில், ஓசூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.