/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ காதலனுடன் பேசியதை கணவன் கண்டித்ததால் மனைவி தற்கொலை காதலனுடன் பேசியதை கணவன் கண்டித்ததால் மனைவி தற்கொலை
காதலனுடன் பேசியதை கணவன் கண்டித்ததால் மனைவி தற்கொலை
காதலனுடன் பேசியதை கணவன் கண்டித்ததால் மனைவி தற்கொலை
காதலனுடன் பேசியதை கணவன் கண்டித்ததால் மனைவி தற்கொலை
ADDED : செப் 16, 2025 01:58 AM
மத்துார், போச்சம்பள்ளி தாலுகா கொட்டாவூரை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மனைவி மலர்கொடி, இவர்களின் மகள் பூஜா, 20. இவருக்கும் மத்துார் அருகே உள்ள குள்ளம்பட்டியை சேர்ந்த பள்ளிப்பட்டி கொட்டாயை சேர்ந்த பாண்டியன் என்பவருக்கும் கடந்த, 20 நாட்களுக்கு முன் திருமணமானது. பூஜா வேறு ஒருவரை காதலித்துள்ளார். அவருடன் திருமணத்திற்கு பிறகும் அடிக்கடி போனில் பேசியுள்ளார்.
இதையறிந்த கணவர் கண்டித்தார். இதில் மனமுடைந்த பூஜா கடந்த, 11ல், விஷம் குடித்தார். அவரை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்கு சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்த நிலையில், 13ல் உயிரிழந்தார். இது குறித்து மத்துார் போலீசார் வழக்குப் பதிந்தனர். திருமணமாகி, 20 நாட்களில், இளம்பெண் இறந்ததால், ஊத்தங்கரை டி.எஸ்.பி., சீனிவாசன் விசாரிக்கிறார்.