/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழையால் மகிழ்ச்சி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழையால் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழையால் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழையால் மகிழ்ச்சி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக மழையால் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 10, 2025 01:13 AM
கிருஷ்ணகிரி, மாவட்டத்தில் பரவலாக பெய்த மழையால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மே மாதம் முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையவில்லை. பகல் நேரத்தில் வீசும் அனல் காற்று இரவிலும் தொடர்வதால் இ பொதுமக்கள் பலர் துாக்கமின்றி தவித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, மாவட்டத்தில் அதிகபட்சமாக நெடுங்கல்லில், 43.8 மி.மீ., மழை பதிவாகி இருந்தது.
இதே போல், கெலவரப்பள்ளி அணை, 25, ஓசூர், 23, தேன்கனிக்கோட்டை, 12, பாரூர், 7, கிருஷ்ணகிரி, 5, அஞ்செட்டி, போச்சம்பள்ளி, சூளகிரியில் தலா, 4, ஊத்தங்கரை, பெணுகொண்டாபுரம், சின்னாறு அணையில் தலா, 3 என மொத்தம், 153.8 மி.மீ., மழை பதிவாகி இருந்தது. மழையால் இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
* ஓசூர் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை, 5:00 மணி முதல், மிதமான அளவில் மழை பெய்தது. குளிர்ந்த காற்று வீசிய வண்ணம் இருந்தது. அதனால் இதமான காலநிலையை மக்கள் உணர்ந்தனர். இரு நாட்களாக மழை பெய்துள்ள நிலையில், மானாவாரி சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட துவங்கி உள்ளனர்.