/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/மேற்கு மண்டல ஐ.ஜி., ஊத்தங்கரையில் ஆய்வுமேற்கு மண்டல ஐ.ஜி., ஊத்தங்கரையில் ஆய்வு
மேற்கு மண்டல ஐ.ஜி., ஊத்தங்கரையில் ஆய்வு
மேற்கு மண்டல ஐ.ஜி., ஊத்தங்கரையில் ஆய்வு
மேற்கு மண்டல ஐ.ஜி., ஊத்தங்கரையில் ஆய்வு
ADDED : ஜூன் 14, 2024 01:02 AM
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை டி.எஸ்.பி., அலுவலகத்தில், மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி நேற்று ஆய்வு மேற்கொண்டார். அங்கிருந்த கோப்புகளை பார்வையிட்டார். பின், போலீஸ் ஸ்டேஷன்களில் நிலுவையிலுள்ள வழக்குகள் குறித்த விபரங்களை கேட்டறிந்ததோடு, அவற்றை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது, கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., தங்கதுரை, ஊத்தங்கரை டி.எஸ்.பி., பார்த்திபன், கிருஷ்ணகிரி மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் இளவரசன், இன்ஸ்பெக்டர்கள் ஊத்தங்கரை கந்தவேல், மகளிர் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயனி, கல்லாவி தமிழரசி, சிங்காரப்பேட்டை சந்திரகுமார், மத்துார் பாலசுப்பிரமணியம், ஊத்தங்கரை உட்கோட்ட போலீஸ் நிலையங்களை சேர்ந்த போலீசார் உடனிருந்தனர்.