/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/கெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பு; 8,000 ஏக்கர் பாசன வசதி பெற வாய்ப்புகெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பு; 8,000 ஏக்கர் பாசன வசதி பெற வாய்ப்பு
கெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பு; 8,000 ஏக்கர் பாசன வசதி பெற வாய்ப்பு
கெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பு; 8,000 ஏக்கர் பாசன வசதி பெற வாய்ப்பு
கெலவரப்பள்ளி அணையில் நீர் திறப்பு; 8,000 ஏக்கர் பாசன வசதி பெற வாய்ப்பு
ADDED : ஜூலை 11, 2024 12:06 AM
ஓசூர்: ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து முதல்போக பாசனத்-திற்கு நேற்று நீர் திறக்கப்பட்டது.ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் குறுக்கே உள்ள கெலவ-ரப்பள்ளி அணையின் ஷட்டர்கள் மாற்றும் பணியால், கடந்-தாண்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்கவில்லை.
பணிகள் முடிந்த நிலையில், நடப்பாண்டு முதல்போக பாசனத்திற்கு நீர் திறக்க தமி-ழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வலது வாய்க்காலில், 26 கன அடி, இடது வாய்க்காலில், 62 கன அடி என மொத்தம், 88 கன அடி நீரை, மாவட்ட கலெக்டர் சரயு, கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத் ஆகியோர் நேற்று காலை திறந்து வைத்தனர். இதன் மூலம் வலது வாய்க்காலில், 2,082 ஏக்கர் நிலமும், இடது வாய்க்காலில், 5,918 ஏக்கரும் பாசன வசதி பெறும். அணைக்கு நீர்-வரத்தை கருத்தில் கொண்டு, 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் நீர் திறக்கப்பட உள்ளது.அதன்படி முதல், 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்தும், அடுத்த, 5 நாட்களுக்கு நீரை நிறுத்தியும், 8 நனைப்புகளுக்கு அடுத்த, 120 நாட்களுக்கு தண்ணீர் வழங்கப்பட உள்ளது. நீரை பயன்படுத்தும், ஓசூர், சூளகிரியை சேர்ந்த மொத்தம், 22 கிராமங்களின் விவசா-யிகள், நீரை சிக்கனமாக பயன்படுத்தி விவசாயம் செய்ய, மாவட்ட கலெக்டர் சரயு அறிவுறுத்தி உள்ளார். நீர்வளத்துறை செயற்பொறியாளர் செந்தில்குமார், உதவி செயற்-பொறியாளர் மோகன்ராஜ், உதவி பொறியாளர்கள் பொன்னிவ-ளவன், ராதிகா, விவசாய சங்க பிரதிநிதி நாராயணசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.