/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
ADDED : ஜூன் 15, 2025 01:37 AM
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், நேற்று பரவலாக மழை பெய்தது. இதனால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
நேற்று முன்தினம் இரவு முதல், நேற்று காலை வரை மாவட்டத்தில் பதிவான மழை அளவு விபரம்: கே.ஆர்.பி டேம் 30.6 மி.மீ., பாம்பாறு டேம், 22, ஊத்தங்கரை, 14.6, கிருஷ்ணகிரி, 7.6, போச்சம்பள்ளி, 5, பெணுகொண்டாபுரம், 4.3, நெடுங்கல், 3, பாரூர், 2 என மொத்தம், 89.1 மி.மீ., மழை பதிவாகியிருந்தது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு நேற்று முன்தினம், 376 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு, 943 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து ஆற்றில் நேற்று காலை முதல் நீர் திறப்பு, 1,072 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையின் மொத்த உயரமான, 52 அடியில் தற்போது, 51 அடிக்கு தண்ணீர் உள்ளது.