ADDED : ஜூன் 01, 2025 01:16 AM
ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாசில்தார் அலுவலக வளாகத்தில், அலுவலக பணியாளர்களுக்கு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், வன்கொடுமை தடுப்பு, சிறார் பாலியல் துன்புறுத்தல், அலுவலகங்களில் பணிபுரியும் பெண்களுக்கான பாலியல் துன்புறுத்தல், குழந்தை திருமணம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு, ஊத்தங்கரை தாசில்தார் மோகன்தாஸ் தலைமை வகித்தார்.
இதில் வருவாய்த்துறை அலுவலக பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர். குழந்தை திருமணம் ஒரு மனித உரிமை மீறல் என்பது குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.