Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி கிராம செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி கிராம செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி கிராம செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி கிராம செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்

ADDED : ஜூன் 24, 2025 01:24 AM


Google News
கிருஷ்ணகிரி, கிருஷ்ணகிரி, பொது சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கம் சார்பில், கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களை நிரப்பக்கோரி, நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் விஜயா தலைமை வகித்தார். மாநில செயலாளர் ராஜேஸ்வரி, அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன், செயலாளர் கல்யாணசுந்தரம், மாநில துணைத்தலைவர் தினேஷ், பொருளாளர் நந்தகுமார், மகளிர் துணைக்குழு அமைப்பாளர் ஜெகதாம்பிகா ஆகியோர் பேசினர். செவிலியர் சங்க பொருளாளர் உதயபானு நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில், மாநிலத்தலைவர் புனிதா பேசியதாவது: தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியை கடந்த, 45 ஆண்டுகளாக கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு முழுவதும், 40 சதவீதத்திற்கும் அதிகமான கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்கள் உள்ளதால், இருக்கும் கிராம சுகாதார செவிலியர்களை கொண்டு தடுப்பூசி செலுத்தும் பணியை, கூடுதல் சுமைகளோடு மேற்கொண்டு வருகிறோம். தற்சமயம், எம்.எச்.பி., ஊழியர்களை கொண்டு இந்த தடுப்பூசியை செலுத்த, பொது சுகாதார இயக்குனர் ஆணை பிறப்பித்துள்ளார். இந்த நடவடிக்கையை கைவிட்டு, காலியாக உள்ள கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களை நிரப்பி, கிராம சுகாதார செவிலியர்கள் மூலம் தடுப்பூசி செலுத்தும் பணியை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us