/உள்ளூர் செய்திகள்/கிருஷ்ணகிரி/ இயந்திரத்தின் பாகம் விழுந்து இரண்டு தொழிலாளர்கள் பலி இயந்திரத்தின் பாகம் விழுந்து இரண்டு தொழிலாளர்கள் பலி
இயந்திரத்தின் பாகம் விழுந்து இரண்டு தொழிலாளர்கள் பலி
இயந்திரத்தின் பாகம் விழுந்து இரண்டு தொழிலாளர்கள் பலி
இயந்திரத்தின் பாகம் விழுந்து இரண்டு தொழிலாளர்கள் பலி
ADDED : செப் 02, 2025 01:35 AM
ஓசூர்:ஓசூர் அருகே, இயந்திரத்தின் பாகம் கழன்று மேலே விழுந்ததில் தொழிலாளர்கள் இருவர் பலியாகினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், முனீஸ்வர் நகர் விரிவாக்கம் அருகே, கிருஷ்ணப்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து, 37. இவரும், பீஹார் மாநிலத்தை சேர்ந்த பிரமோத்குமார், 26, என்பவரும், பேலகொண்டப்பள்ளியிலுள்ள, 'யூனோ மிண்டா' என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். நேற்று மாலை, 6:45 மணிக்கு பணியில் இருந்தபோது, இயந்திரத்தின் ஒரு டன் எடையிலான பாகம், கழன்று இருவர் மீதும் விழுந்தது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.
ஓசூர் மாநகராட்சி பொதுசுகாதார குழு தலைவரும், 22வது வார்டு கவுன்சிலருமான மாதேஸ்வரன், உயிரிழந்த காளிமுத்து குடும்பத்திற்கு நேரில் ஆறுதல் கூறினார். மத்திகிரி போலீசார் விசாரிக்கின்றனர்.