ADDED : செப் 22, 2025 01:42 AM
ஊத்தங்கரை:ஊத்தங்கரை அடுத்த, அனுமன் தீர்த்தம் பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார், 46. இவரது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த பைக்கை மர்ம நபர்கள் நேற்று முன்தினம் இரவு திருடி சென்றனர்.
இது குறித்து ஜெயக்குமார் ஊத்தங்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். அதன்படி ஊத்தங்கரை குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு, பைக்கை திருடிய தர்மபுரி மாவட்டம், தண்டக்குப்பம் பகுதியை சேர்ந்த கிஷோர், 19, என்பவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் அனுமன் தீர்த்தம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த டி.வி.எஸ்., ஜஸ்ட் ஸ்கூட்டியை திருடி சென்றது தெரியவந்தது. கிஷோரை கைது செய்து அவரிடமிருந்து, 2 பைக்குகளை போலீசார் மீட்டனர்.